கடலுார் - அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்காலிக பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:சிதம்பரம், சுவாமி சகஜானந்தா அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 'மொழி மற்றும் சாப்ட் ஸ்கில் லேப்' தற்காலிக பயிற்றுனர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாத தொகுப்பூதியம் 20 ஆயிரம் ரூபாய்.இப்பணியிடத்திற்கு வயது வரம்பு அரசு நிர்ணயித்தபடி. கல்வித் தகுதி பி.பி.ஏ., எம்.பி.ஏ., பட்டப்படிப்புடன், அடிப்படை கம்ப்யூட்டர் சயின்ஸ், 12வது வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ்க்கு இணையாக படித்து, கணினி கையாளும் திறன் இருத்தல் வேண்டும். மேலும், தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கும் திறன் மற்றும் ஆங்கில மொழி பயிற்சியளிக்கும் திறன் இருத்தல் வேண்டும்.இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட இருபாலரிடமும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.முதல்வர், சுவாமி சகஜானந்தா அரசு தொழிற் பயிற்சி நிலையம், சீர்காழி மெயின்ரோடு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், சிதம்பரம் என்ற முகவரிக்கு வரும் 12ம் தேதிக்குள் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE