பண்ருட்டி -பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பண்ருட்டி லட்சுமி பதிநகர், வீரபெருமாநல்லுார், திருத்துறையூர், பூங்குணம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதிகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கார்டுதாரர்களுக்கு 2,500 ரூபாய், மற்றும் பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு பொருட்களை சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., வழங்கினார்.நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ராம்குமார், கோதண்டம் தலைமை தாங்கினர். ஒன்றிய சேர்மன் ஜானகிராமன், முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பாபு புஷ்பராஜ், பெருமாள் முன்னிலை வகித்தார்.தாசில்தார் பிரகாஷ், வட்ட வழங்கல் அலுவலர் கவுரி, முன்னாள் கவுன்சிலர் ரமாதேவி ராமலிங்கம், பேரவைச் செயலாளர் செல்வம், ஒன்றிய அவைத் தலைவர் ஜெகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.விருத்தாசலம்கருவேப்பிலங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கத் தலைவர் சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் தம்பிதுரை, ஒன்றிய சேர்மன் செல்லதுரை, கூட்டுறவு சங்கச் செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கலைச்செல்வன் எம்.எல்.ஏ., ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.தொழில்நுட்ப அணி ஒன்றிய செயலர் ரமேஷ், ஊராட்சித் தலைவர் சீத்தாலட்சுமி வீராசாமி, மாவட்ட பிரதிநிதி குணா ராமு, கிளைச் செயலர்கள் முத்து, கண்ணன், ராஜேந்திரன், பன்னீர்செல்வம், பாண்டியன், சிங்கமுத்து, சச்சிதானந்தம், மதி, மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.பெண்ணாடம்மாளிகைக்கோட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக வளாகத்தில், சங்கத் தலைவர் மணிக்கண்ணன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., நல்லுார் தெற்கு ஒன்றிய செயலர் ராஜேந்திரன் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார்.மாவட்ட கவுன்சிலர் சுப்ரமணியன், கிளைச் செயலாளர் சுந்தரம், சங்க இயக்குனர்கள் ராஜவேல், பூமாலை ராஜா, விற்பனையாளர்கள், சங்க பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.வேப்பூர்வேப்பூர் ஊராட்சியில், ஆவின் சேர்மன் பச்சமுத்து தலைமை தாங்கினார். வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., கிளைச் செயலர் ராமச்சந்திரன், கூட்டுறவு வங்கி உறுப்பினர் பழனிமுத்து, வழக்கறிஞர் குமரேசன், அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE