திட்டக்குடி - ஆலத்துார் ஊராட்சித் தலைவருக்கு சென்னையில் நடந்த விழாவில் சமூக சேவைக்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.மங்களூர் அடுத்த ஆலத்துார் ஊராட்சித் தலைவர் மல்லிகை வேல்முருகன். இவர், கொரோனா காலத்தில் சிறப்பான முறையில் நோய்த்தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டார்.மேலும், புயல், மழையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி, மக்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்தார்.இவரது சிறப்பான பணிக்காக ஜனவரி 2ம் தேதி சென்னையில் நடந்த விழாவில் அகாடமி ஆப் யூனிவர்சல் குளோபல் பீஸ் மற்றும் மகா பைன் ஆர்ட்ஸ் சார்பில் சிறந்த சமூக சேவைக்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.இவ்விருதினை விஞ்ஞானி மதுகிருஷ்ணன் மற்றும் புரோடிமா மதுகிருஷ்ணன், ஊராட்சித் தலைவர் மல்லிகை வேல்முருகனுக்கு வழங்கினார்.விழாவில் மகா பைன் ஆர்ட்ஸ் செயலாளர் அனுராதா ஜெயராமன், அனைத்திந்திய விளையாட்டுக் கழக பொதுச்செயலாளர் சவுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.அ.தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன், மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வாகை இளங்கோவன் ஆகியோரை மல்லிகை வேல்முருகன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE