வடலுார் - வடலுார் அருகே பைக் மோதி காயமடைந்தவர் இறந்தார்.வடலுார், ஆபத்தாரணபுரம், பக்தவச்சலம் நகரைச் சேர்ந்தவர், ராஜசேகரன், 60; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.இவர், நேற்று முன்தினம் வடலுாரில் இருந்து விருத்தாசலம் நோக்கி பைக்கில் சென்றார். சபை நிறுத்தம் அருகே பின்னால் வந்த பைக் ராஜசேகரன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ராஜசேகரன், சம்பவ இடத்திலேயே இறந்தார். வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE