தொடர் மழையால் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள்: விவசாயிகள் தவிப்பு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி - கள்ளக்குறிச்சி அடுத்த நல்லாத்துார் கிராமத்தில் சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக செழித்து வளர்ந்த நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள், அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக

கள்ளக்குறிச்சி - கள்ளக்குறிச்சி அடுத்த நல்லாத்துார் கிராமத்தில் சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக செழித்து வளர்ந்த நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள், அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக நெல் விளைச்சலில் முக்கிய மாவட்டமாக விளங்கும் கள்ளக்குறிச்சி பகுதியில், ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பொன்னி, பொன்மணி, பி.பி.டி., உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டன. பெரும்பாலான வயல்களில் நெற்கதிர்கள் முற்றி, அறுவடைக்கு தயாராக உள்ளன.கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள், வயலில் சாய்ந்து கிடக்கின்றன. நல்லாத்துார் கிராமத்தில் நெல் பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.வயலில் மழை நீர் தேங்கி ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதே நேரத்தில் பயிர்கள் நிலத்தில் சாய்ந்துள்ளதால், நெல்கதிர்கள் முளைவிடும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.இந்நிலையில், இப்பகுதியில் மேலும் சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X