கள்ளக்குறிச்சி - கள்ளக்குறிச்சி நகரையொட்டியுள்ள பெரிய ஏரி உட்பட மூன்று ஏரிகள் நிரம்பி கடல் போல் காட்சியளிப்பதால் விவசாயிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி பகுதியில் அணைகள், ஏரிகள் பாசனத்தை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, மக்காச்சோளம் உட்பட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பருவ மழையில், வறண்டு கிடந்த அணைகள், ஏரிகளில் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. கோமுகி அணை நிரம்பி ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தோடியது. தடுப்பணையிலிருந்து சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டு நிரம்பியது. கள்ளக்குறிச்சி நகரையொட்டி அமைந்துள்ள கோட்டைமேடு, தென்கீரனுார், ஏமப்பேர் என அனைத்து ஏரிகளும் நிரம்பி தற்போது கோடி வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது. தற்போது ஏரிகள் முழுதும் நிரம்பி கடல் போல் காட்சியளிப்பதால், சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், ஏரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு தண்ணீர் பிரச்னைக்கும் தீர்வு ஏற்பட்டுள்ளதால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE