ஸ்கிரீன் துணியில் சிக்கி சிறுவன் பரிதாப பலி

Added : ஜன 05, 2021
Share
Advertisement
நெட்டப்பாக்கம் - நெட்டப்பாக்கம் அருகே விளையாடிய போது வீட்டில் இருந்த ஸ்கிரீன் துணியில் சிக்கி சிறுவன் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.விழுப்புரம் முத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் குமார், 43; கொத்தனார். இவர் புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் அடுத்த குச்சிப்பாளையம் யோகப்பிரியா நகர் தனஜோதி என்பவரை 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து

நெட்டப்பாக்கம் - நெட்டப்பாக்கம் அருகே விளையாடிய போது வீட்டில் இருந்த ஸ்கிரீன் துணியில் சிக்கி சிறுவன் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.விழுப்புரம் முத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் குமார், 43; கொத்தனார். இவர் புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் அடுத்த குச்சிப்பாளையம் யோகப்பிரியா நகர் தனஜோதி என்பவரை 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து மாமியார் வீட்டில் வசிக்கிறார். இவர்களுக்கு கோகுல், 12; என்ற மகன், பாவானா, 5; என்ற மகளும் உள்ளனர்.கடந்த 31ம் தேதி வேலையாக விழுப்புரத்திற்கு குமார் சென்று விட்டார். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பை வாங்க, நேற்று முன்தினம் மாலை கரியமாணிக்கத்திற்கு தனஜோதி சென்றார். திரும்பி வந்த போது, வீடு பூட்டி இருந்ததால், கதவை தட்டினார். வெகுநேரம் கதவை திறக்காததால், ஜன்னல் வழியாக தனஜோதி பார்த்தார். மகன் கோகுல் வீட்டின் கதவில் இருந்த ஸ்கிரீன் துணியால் கழுத்தில் இறுக்கி, நாற்காலியில் இருந்து கீழே அமர்ந்திருந்தார். உறவினர்கள் கதவை உடைத்து சென்று மயங்கி இருந்த கோகுலை நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு துாக்கிச் சென்றனர். பணியில் இருந்த மருத்துவர் பரிசோதித்து, கோகுல் இறந்து விட்டதாக கூறினார்.குமார் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X