புதுச்சேரி - பேராசிரியர்கள் மற்றும் கவிஞர்களுக்கு சிங்காரவேலர் விருது வழங்கப்பட்டது. மீனவர் கலை இலக்கிய ஆய்வு மையம் சார்பில், சிங்காரவேலரின் 161வது பிறந்த நாள் விழா தமிழ்ச் சங்கத்தில் நடந்தது. மைய தலைவர் வல்லத்தான் வரவேற்றார். சிறப்புத் தலைவர் நித்தியானந்தம் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அசோகா சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.விழாவில் 'சிங்காரவேலரின் கல்விச் சிந்தனைகள்' என்ற நுாலை, முன்னாள் எம்.பி., ராமதாஸ், 'பொதுத் தொண்டு' என்ற நுாலை, பருவதராஜ குல மீனவர் பொது அறக்கட்டளை நிறுவனர் சாமிக்கண்ணு வெளி யிட்டனர்.தொடர்ந்து, ராமலிங்கம், பேராசிரியர்கள் முத்துக்குமரன், குமார், அவ்வை நிர்மலா, கவிஞர்கள் புகழேந்தி, சுந்தர பழனியப்பன் ஆகியோருக்கு சிங்காரவேலர் சுடர் விருதும், கவிஞர்கள் கலியன், புனிதஜோதி, கலிவரதன் ஆகியோருக்கு சிங்காரவேலர் பற்றாளர் விருதும் வழங்கப்பட்டது.பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு பரிசுகளையும் வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE