பழவேற்காடு - குப்பை கழிவுகளை சாலையோரத்தில் கொட்டி குவிக்கப்பட்டு வந்த நிலையில், அவை தற்போது எரிக்கப்படுவதால், பொன்னேரி- - பழவேற்காடு சாலை புகை மண்டலமாக மாறி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பழவேற்காடு பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் கடைகளின் குப்பை கழிவுகள் முறையாக கையாளப்படாமல், நீர் நிலைகளில் கொட்டி குவிக்கப்பட்டு வந்தன.தற்போது, நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால், அவை, பொன்னேரி - -பழவேற்காடு சாலையோரங்களில் கொட்டி குவிக்கப்பட்டு வருகிறது.குப்பை கழிவுகளில் இருந்து, துர்நாற்றம் வீசி வருவதுடன், அவை காற்றில் பறந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்தன.இந்நிலையில், மேற்கண்ட பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால், பொன்னேரி- - பழவேற்காடு சாலை புகை மண்டலமாக மாறி வருகிறது.சாலையை புகை சூழ்ந்து விடுவதால், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு இடையே பயணிக்கின்றனர்.இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மூச்சு திணறலுக்கும் ஆளாகின்றனர். மேற்கண்ட பகுதியில், குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதிப்பதுடன், அவற்றை முறையாக கையாள அறிவுறுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE