பொது செய்தி

தமிழ்நாடு

ஏரி மதகை சேதப்படுத்தி நீர் வெளியேற்றம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
மணவாள நகர் - மணவாள நகர் பகுதியில், வெங்கத்துார் ஏரியில் சேதப்படுத்தப்பட்ட மதகுகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது, மணவாள நகர். இங்குள்ள வெங்கத்துார் ஏரி, சில தினங்களாக மழையால் நீர் நிரம்பிஉள்ளது.இந்நிலையில், ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனிநபர் ஒருவர், மதகு பகுதியை

மணவாள நகர் - மணவாள நகர் பகுதியில், வெங்கத்துார் ஏரியில் சேதப்படுத்தப்பட்ட மதகுகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது, மணவாள நகர். இங்குள்ள வெங்கத்துார் ஏரி, சில தினங்களாக மழையால் நீர் நிரம்பிஉள்ளது.இந்நிலையில், ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனிநபர் ஒருவர், மதகு பகுதியை சேதப்படுத்தி, நீரை வெளியேற்றிஉள்ளார்.இதனால், ஏரியின் அருகில் எம்.ஜி.நகர் மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் நீர் சேகரமாகி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.தகவலறிந்து பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் லோகரட்சகன் உத்தரவின்படி, பாசன உதவியாளர்கள் நடராஜன், காண்டீபன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர்.பின், அப்பகுதி மக்களிடம் இன்று, பணியாளர்களை அழைத்து வந்து உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைப்பதாக உறுதி அளித்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X