வாலாஜாபாத் - தென்னேரி மேட்டுக்கலங்களில், தடுப்பு பலகைகளுக்கு பதிலாக, வைக்கோல் கட்டுகளை அமைத்ததால், ஏரி நீர் வீணாக வெளியேறி வருகிறது.வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி கிராமத்தில், 18 அடி ஆழத்தில், 1,106.73 கன அடி நீரை தேக்கி வைக்கக்கூடிய தென்னேரி ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை வைத்து, 5,858 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.தென் மேற்கு பருவ மழை மற்றும் வட கிழக்கு பருவ மழைக்கு, இந்த ஏரி நிரம்பி, கலங்கல் வழியாக வெளியேறுகிறது. இதை தடுக்க, கலங்கலில் தடுப்பு அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.ஆனால், தடுப்பு அமைக்காமல், வைக்கோல் கட்டுகளை வைத்து, அதிகாரிகள் அடைத்தனர். தற்போது, வைக்கோல் கட்டு தளர்ந்து, தண்ணீர் வீணாக வழிகிறது.எனவே, பொதுப்பணித் துறையினர் முறையாக ஆய்வு செய்து, தென்னேரி மேட்டுக்கலங்களில் தடுப்பு பலகை அமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE