சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாகப்பாம்பு இறப்பு: மக்கள் போராட்டம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
திருக்கழுக்குன்றம்; புற்றை அகற்றியபோது, நாகப்பாம்பு இறந்ததால், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, சங்குமேட்டுத் தெருவில், தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள புற்ற ஒன்றில் இருந்த நாகபாம்பை, பக்தர்கள் வழிபாடு செய்தனர்.கோவில் புற்று அருகே, தனிநபருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை துாய்மைபடுத்திய அவர், நேற்று, ஜே.சி.பி.,

திருக்கழுக்குன்றம்; புற்றை அகற்றியபோது, நாகப்பாம்பு இறந்ததால், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, சங்குமேட்டுத் தெருவில், தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள புற்ற ஒன்றில் இருந்த நாகபாம்பை, பக்தர்கள் வழிபாடு செய்தனர்.கோவில் புற்று அருகே, தனிநபருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை துாய்மைபடுத்திய அவர், நேற்று, ஜே.சி.பி., இயந்திரத்தால் மண் மேட்டை துார் வாரினார்.அப்போது, அருகே புற்றையும் அகற்றினார். அப்போது, புற்றில் இருந்த நாகபாம்பு இறந்தது.இதையறிந்த பொதுமக்கள், அரசு இடம் ஆக்கிரமிப்பு, நாகப்பாம்பை சாகடித்தது தொடர்பாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போராட்டம் செய்தனர்.பின், சம்பந்தப்பட்ட நபரை, செங்கல்பட்டு வனத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X