பொது செய்தி

தமிழ்நாடு

நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கும் முகாம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
உத்திரமேரூர்; கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான, 'ஆயுஷ் இம்யூனிட்டி கிட்' இலவசமாக வழங்கும் முகாம், சாலவாக்கத்தில், நேற்று நடந்தது.கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த, 'ஆயுஷ் இம்யூனிட்டி கிட்' என்ற ஆயுர்வேத நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.இம்மருந்தை, சென்னை ஸ்ரீஹரீயம் ஆயுர்வேத மருத்துவ மையம், செங்கல்பட்டு போதி

உத்திரமேரூர்; கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான, 'ஆயுஷ் இம்யூனிட்டி கிட்' இலவசமாக வழங்கும் முகாம், சாலவாக்கத்தில், நேற்று நடந்தது.கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த, 'ஆயுஷ் இம்யூனிட்டி கிட்' என்ற ஆயுர்வேத நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.இம்மருந்தை, சென்னை ஸ்ரீஹரீயம் ஆயுர்வேத மருத்துவ மையம், செங்கல்பட்டு போதி தர்மர் ஆயுர்வேத மையத்தினர், தன்னார்வலர்களுடன் இணைந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முகாம் அமைத்து, கிராமவாசிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.அதன்படி, சாலவாக்கம் லயன்ஸ் சங்கம் சார்பில், சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் வித்யாசங்கர், கிரணவளி ஆகியோர் சார்பில், உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில், நேற்று முகாம் நடந்தது.இதில், துாய்மை பணியாளர்கள், 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் என, 300க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டன. முகாமை, சாலவாக்கம் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் ஒருங்கிணைந்தார்.கொரோனா நோய் குறித்தும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, ஆயுர்வேத நோய் எதிர்ப்பு சக்தி மருந்தின் அவசியம் குறித்தும், ஆயுர்வேத மருத்துவர்கள் சுதிர் அய்யப்பன், தாமரை மணாளன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X