சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கியில் கொள்ளை முயற்சி

Added : ஜன 05, 2021
Share
Advertisement
நத்தம் : நத்தம் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மதுரை ரோடு வத்திபட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்படுகிறது. நேற்று காலை வங்கி ஊழியர்கள் பணிக்கு சென்ற போது முன்பக்க கதவு கம்பியால் சேதப்படுத்தப்பட்டிருந்தது. டி.எஸ்.பி., வினோத், இன்ஸ்பெக்டர் ராஜமுரளி உள்ளிட்ட போலீசார் அதனை பார்வையிட்டனர். சன்னல் கம்பிகளும்

நத்தம் : நத்தம் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை ரோடு வத்திபட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்படுகிறது. நேற்று காலை வங்கி ஊழியர்கள் பணிக்கு சென்ற போது முன்பக்க கதவு கம்பியால் சேதப்படுத்தப்பட்டிருந்தது. டி.எஸ்.பி., வினோத், இன்ஸ்பெக்டர் ராஜமுரளி உள்ளிட்ட போலீசார் அதனை பார்வையிட்டனர். சன்னல் கம்பிகளும் சேதப்படுத்தப்பட்டு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அலாரம் ஒலித்ததால் தப்பியோடிருக்கலாம் என்று கூறினர். இதனால் ரூ.பல கோடி பணம், நகைகள் தப்பின. நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் ரூபி சிறிது துாரம் ஓடி நின்றது. நத்தம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X