கொடைக்கானல் : கொடைக்கானலையே அதிர வைக்கும் அளவு சத்தத்துடன், இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் பறப்பது அதிகரிக்கிறது.
ஊரடங்கு தளர்வுக்கு பின் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. தொடர் விடுமுறையில் கொடைக்கானலில் குவிந்துள்ளனர். வனச்சுற்றுலா தலங்கள், ஏரிச்சாலை, மேல்மலை கிராமமான பூம்பாறை பகுதிகளுக்கு அதிக குதிரைத் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சென்று வருகின்றனர்.இந்த வாகனங்கள் அதிக ஒலியுடன், வேகமாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஜாலி ரைடாக இளைஞர்கள் பறக்கின்றனர்.
இதுபிற சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சத்தையும், முகம் சுளிப்பையும் ஏற்படுத்துகிறது. இதில் சிலர் இளைஞர்கள் விபத்தில் சிக்குவதும் உண்டு. துவக்கத்தில் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுத்த போலீசார் ஊரடங்கிற்கு பின் கண்காணிக்க தவறிவிட்டனர். பொதுமக்களை பயமுறுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகளை போலீசார் அனுமதிக்க கூடாது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE