சென்னை; சென்னை விமான நிலையத்தில், 2020ம் ஆண்டில், 14.20 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சென்னைக்கு விமானத்தில், தங்கம் கடத்துவது போன்று, போதைப் பொருட்கள் கடத்துவதும், 2020ம் ஆண்டு அதிகரித்து காணப்பட்டது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் அதிகம் புழக்கத்தில் இருந்து வரும், எல்.எஸ்.டி., போதை ஸ்டாம்புகள், கடந்த ஜூலையில், முதல்முறையாக, சென்னை விமான நிலைய சரக்ககத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.எல்.எஸ்.டி., ஸ்டாம்புகள்'லிசர்ஜிக் ஆசிட் டைதிலமைட்' என்ற திரவத்தின் சுருக்கம், எல்.எஸ்.டி., எனப்படுவது. இந்த திரவம், 'ஸ்டாம்புகள்' வடிவிலான அட்டைகளில் ஊறவைக்கப்பட்டு, வாயில் வைத்து சுவைத்து, போதைக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த திரவத்தை, உலகின் பெரும்பாலான நாடுகள் தடை செய்துள்ளன. எல்.எஸ்.டி.,யை பயன்படுத்துவதால், புற்றுநோய், ரத்த அழுத்தம், உடல்சோர்வு மற்றும் துாக்கமின்மை ஏற்படும்.ஊரடங்கில் அதிகம்ஊரடங்கால், மார்ச் முதல், நாடே முடங்கி கிடந்தாலும், போதைப் பொருட்களை கடத்தும் கும்பல்களின் பணிகள் வழக்கம் போல், சரக்கு விமானங்கள் வாயிலாக, தங்குதடையின்றி நடந்தன. 'கொரோனா வைரஸ்' பரவுதலை தடுக்க, ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், ஆமெரிக்கா, எத்தியோப்பியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இயக்கப்பட்ட சரக்கு விமானங்களில், மருத்துவ பொருட்கள் என்ற பெயரில், அதிகளவில் போதை மருத்துகள் மற்றும் மாத்திரைகள் கடத்தப்பட்டன.குறிப்பாக, கஞ்சா பவுடர், ஒப்பியம், 'காட்' இலைகள், மெத்தாபேட்டமைன் போன்ற போதைப் பொருட்கள், கடத்தி வரப்பட்டன.சென்னை மண்டல சுங்கத்துறையினர், 2020ம் ஆண்டு, பிப்ரவரி - நவம்பர் வரையிலான, 10 மாதங்களில், 23 வழக்குகளில், ஒரு பெண் உட்பட, 26 பேரை கைது செய்தனர். இதன் மதிப்பு, 14.20 கோடி ரூபாய். முந்தைய ஆண்டுகளின் கடத்தல் சம்பவங்களை ஒப்பிடும் போது, சென்னையில், 2020ம் ஆண்டு, போதைப் பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது.கடந்த, 2018ல், ஒன்பது போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில், 3.7 கோடி ரூபாயும், 2019ல், 13 வழக்குகளில், 7.20 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE