கொடைக்கானல் : கொடைக்கானல் பஸ்ஸ்டாண்ட் போதிய பராமரிப்பின்றி உள்ளதால் பயணிகளுக்கு சங்கடம் தருவதாக அமைந்துள்ளது.
கடந்த 2010 ல் பஸ்ஸ்டாண்ட் நவீன தொழில்நுட்பம் மற்றும் ஐ.எஸ்.ஓ., தரத்துடன் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இதில் வணிக வளாகம், பயணிகள் இருக்கை, சுகாதார வளாகங்கள் என அனைத்து வசதியும் இருந்தன. நகராட்சி பராமரித்து வரும் நிலையில் இருபாலர் கழிப்பறை துர்நாற்றம் வீசுவதுடன், மின்சார ஒயரிங் சேதமடைந்துள்ளது.
செயல்படாத ஜெனரேட்டர், தடுப்பு கண்ணாடிகள் சேதம், சுவர்களில் மழைநீர்க் கசிவு, இருக்கைகள் சேதம் என சுற்றுலா நகரின் பஸ்ஸ்டாண்ட் அலங்கோலமாக உள்ளது. மேலும் பஸ்கள் நிறுத்தும் பகுதி தவிர்த்து பிறஇடங்களை சுற்றுலா வாகனங்கள், டாக்சிகள், நகராட்சி லாரி ஆக்கிரமித்து பஸ்களுக்கு இடையூறாக உள்ளன.
பஸ்ஸ்டாண்டிற்கு காவலர் இல்லாததால் இரவில் தகாத செயல்கள் அரங்கேறுகின்றன. போலீஸ் கண்காணிப்பு வளையத்திற்குள் பஸ்ஸ்டாண்ட் இல்லை. எனவே சர்வதேச சுற்றுலா நகரின் பஸ்ஸ்டாண்ட் அனைவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE