சென்னை; சென்னை ரயில்வே கோட்டத்தில், நேற்று முதல், 660 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பொது பயணியருக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை.சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் நிலையத்தில் இருந்து, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி மற்றும் சூலுார்பேட்டைக்கு, புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.தாம்பரம் -- செங்கல்பட்டு- - திருமால்பூர் உட்பட, ஐந்து வழித்தடங்களில், டிச., 28ம் தேதியில் இருந்து, திங்கள் முதல் சனிக்கிழமை வரை, 500 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.இந்த ரயில்களில் கூட்டம் அதிகம் இருந்ததால், மேலும், கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என, பயணியர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனையொட்டி, நேற்று முதல், ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை, 660 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை ரயில்கால அட்டவணை குறித்து, விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. நேற்று முதல் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால், காலை, மாலை நேரங்களை விட, மற்ற நேரங்களில், ரயில்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது.
கூட்டம் அதிகம் உள்ள காலை, 7:00 மணி முதல், 9:30 மணி வரையும், மாலை, 4:30 மணியில் இருந்து, இரவு, 7:00 மணி வரையும், பொது பயணியர் பயணம் செய்ய அனுமதியில்லை.இந்த கட்டுப்பாடு தொடரும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE