சென்னை; பெரியமேடு பகுதியில், 'பேனர்' வைப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, தி.மு.க., பிரமுகர் உட்பட, இரண்டு பேருக்கு, ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து, எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்புஅளித்துள்ளது.பெரியமேடு பகுதியில், ரயில்வே கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவர் மோகனசுந்தரம். அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவர், 2013, பிப்., 22ல், அலுவலகம் முன், தன் கட்சி சார்பாக பேனர் வைத்துள்ளார். இதற்கு, அதே அலுவலகத்தில் பணிபுரியும், தி.மு.க.,வைச் சேர்ந்த பரமசிவம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பரமசிவத்திற்கு ஆதரவாக வெங்கடேசன் உட்பட, ஐந்து பேர் இருந்துள்ளனர். இவர்கள் மோகனசுந்தரத்தை உருட்டுக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து, பெரியமேடு போலீசார் விசாரித்தனர்.வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று, மாஜிஸ்திரேட் சந்தோஷ் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பரமசிவம் மற்றும் வெங்கடேசன் ஆகியோருக்கு, ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். குற்றம் நிரூபிக்கப்படாததால், நான்கு பேரை விடுதலை செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE