சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசுபஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

Added : ஜன 05, 2021
Share
Advertisement
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.உசிலம்பட்டியைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் உதயசூரியன் 42, மதுரை - பெரியகுளம் அரசு பஸ்சை இயக்கினார். பள்ளபட்டி ரயில் பாதை மூடப்பட்டு தாமதம் ஏற்பட்டது. இந்த பஸ்சை தொடர்ந்து வந்த தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர், அரசு பஸ் டிரைவரிடம் ஏன் தாமதமாக

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டியைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் உதயசூரியன் 42, மதுரை - பெரியகுளம் அரசு பஸ்சை இயக்கினார். பள்ளபட்டி ரயில் பாதை மூடப்பட்டு தாமதம் ஏற்பட்டது. இந்த பஸ்சை தொடர்ந்து வந்த தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர், அரசு பஸ் டிரைவரிடம் ஏன் தாமதமாக வருகிறீர்கள் எனக் கேட்டு சண்டையிட்டனர்.

பள்ளபட்டி, சிலுக்குவார்பட்டி, நிலக்கோட்டை நிறுத்தங்களில் தகராறு செய்தவர்கள் வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் அவரைத் தாக்கினர். அரசு பஸ் டிரைவர், திண்டுக்கல் உதவி மேலாளர் பழமலை ஆகியோர் வத்தலக்குண்டு போலீஸில் புகார் செய்தனர். போலீசார் தனியார் பஸ் டிரைவர் முத்துக்காளை, 30, கண்டக்டர் ராஜேஸ்கண்ணன் 20 ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X