மாங்காடு; மாங்காடு அருகே, அ.தி.மு.க., விளம்பர தட்டி வைத்து, பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட்டனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கடைகளிலும், நேற்று முதல், 2,500 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ரேஷன் கடையில், அ.தி.மு.க., விளம்பர தட்டிகளை வைத்து, அ.தி.மு.க.,வினர் பொங்கல்தொகுப்பு வழங்கி வந்தனர்.இந்நிலையில், ஆலந்துார் எம்.எல்.ஏ., அன்பரசன் தலைமையிலான தி.மு.க.,வினர், அங்கு சென்று, அ.தி.மு.க., விளம்பர தட்டிகளை வைத்து, பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், தி.மு.க.,வினருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாங்காடு போலீசார் விரைந்து, பேச்சு நடத்தினர். அப்போதும், அ.தி.மு.க.,வினர் விளம்பர தட்டிகளை எடுக்காததால், தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட்டனர். அதன்பின், விளம்பர தட்டி அகற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE