பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய இளைஞர் தின விழா

Added : ஜன 05, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'தேசிய இளைஞர் தின விழா, மாநில போட்டிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 18 பேர் தேர்வாகியுள்ளனர்' என, விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி கூறினார்.சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தையொட்டி, 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டோருக்கு தனி நபர், குழு போட்டி நடத்தப்படுகிறது. இசை, நடனம், நாடகம், உடை அலங்கார போட்டிகளில் திறமை காட்டுவோர் மாநில போட்டிக்கு செல்வர்.

திண்டுக்கல் : 'தேசிய இளைஞர் தின விழா, மாநில போட்டிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 18 பேர் தேர்வாகியுள்ளனர்' என, விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி கூறினார்.

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தையொட்டி, 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டோருக்கு தனி நபர், குழு போட்டி நடத்தப்படுகிறது. இசை, நடனம், நாடகம், உடை அலங்கார போட்டிகளில் திறமை காட்டுவோர் மாநில போட்டிக்கு செல்வர். அதில் முதலிடம் பெறுவோர் தேசிய போட்டியில் பங்கேற்பர்.அவர் கூறியது: திண்டுக்கல்லில் மாவட்ட போட்டிகள் டிச.29, 30 ல் ஆன்லைன் வாயிலாக நடந்தது.இதில் 77 பேர் பங்கேற்று படைப்புகளை வீடியோவாகஅனுப்பினர்.

தனி நபர் போட்டிக்கு 11 பேர், குழுப் போட்டிக்கு 7 பேர் என மொத்தம் 18 பேர் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.தேர்வு பெற்றோர் பழநி அக்ஷயா மெட்ரிக் பள்ளி ரக்ஷாம்பிகை, திண்டுக்கல் செயின்ட் ஜோசப் பள்ளி கன்னிகா, மீனா, எம்.எஸ்.பி., பள்ளி ஹரிவேலன், ஜி.டி.என்., கல்லுாரி விக்னேஷ் சுதர்ஸன், சதீஷ் பாபு, யோகேஸ்வரன், சுதர்ஸன், ஒட்டன்சத்திரம் ஜெனிதா பிரின்சி, பி.எஸ்.ஜி., கல்லுாரி நிவேதா, ஹரி நடன பள்ளி ஹரி கிருஷ்ணா, ரம்யா, அனுகிரஹா பள்ளி பவானி, ராஜன், ஆரோக்கிய சென்டர் தமிழரசன், அண்ணாமலை பல்கலை கோமதி, குழு போட்டியில் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர்கள் தேர்வாகினர். இன்று (ஜன.5) முதல் ஜன.8 வரை மாநில போட்டி நடக்கிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X