கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிப்பு கூலிப்படையினர் ஏழு பேர் சுற்றிவளைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிப்பு கூலிப்படையினர் ஏழு பேர் சுற்றிவளைப்பு

Added : ஜன 05, 2021 | கருத்துகள் (2)
Share
சென்னை; சென்னையில், வாலிபரை கொலை செய்து விடுவதாக மிரட்டி, பணம்பறித்த ரவுடி கும்பலை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, அசோக் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், 25. இவர், பாரிமுனையில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார்.இரு தினங்களுக்கு முன், அவரது மொபைல் போனில் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, 'உன்னை கொலை செய்ய, சுரேஷ் என்பவர், 5 லட்சம் ரூபாய் தந்துள்ளார். 'உயிர் மேல் ஆசை இருந்தால்,

சென்னை; சென்னையில், வாலிபரை கொலை செய்து விடுவதாக மிரட்டி, பணம்பறித்த ரவுடி கும்பலை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, அசோக் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், 25. இவர், பாரிமுனையில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார்.இரு தினங்களுக்கு முன், அவரது மொபைல் போனில் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, 'உன்னை கொலை செய்ய, சுரேஷ் என்பவர், 5 லட்சம் ரூபாய் தந்துள்ளார். 'உயிர் மேல் ஆசை இருந்தால், நான் சொல்லும் இடத்திற்கு சென்று, அங்கு வரும் நபரிடம், 5 லட்சம் ரூபாயை கொடுத்துவிடு; இல்லையென்றால், உன்னை கொலை செய்துவிடுவோம்' என, மிரட்டியுள்ளார்.பயந்துபோன சுரேஷ், தன்னிடம், 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளதுஎனக் கூறியுள்ளார். இதற்கு அந்த மர்ம நபர், 'முதலில், 25 ஆயிரம் ரூபாயை கொடு; மீதி பணத்தை, இரண்டு நாட்களுக்குள் தந்துவிடு' என, கூறியுள்ளார்.அதன்படி, பாரிமுனை, ராஜாஜி சாலையில், இந்தியன் வங்கி அருகில் நின்ற மர்ம நபரிடம், சுரேஷ், 25 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். மீதி பணத்தை கேட்டு, மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதையடுத்து, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில், சுரேஷ் புகார் அளித்தார்.போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், சுரேஷின் மொபைல் போனுக்கு வந்த எண்கள் விபரம், டவர் சிக்னல் சுட்டிக்காட்டிய இடம் மற்றும் பணம் கொடுக்கப்பட்ட, இந்தியன் வங்கி அருகில் உள்ள, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அப்போது, கொடுங்கையூர், எருக்கஞ்சேரியைச் சேர்ந்த ரவுடி மணிகண்டன், 30, வியாசர்பாடி, சாஸ்திரி நகரைச் சேர்ந்த பால் ஜூலியன், 32, எண்ணுார், சரவண பெருமாள், 45, உள்ளிட்ட, ஏழு பேர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.ஏழு பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, பாதிக்கப்பட்ட சுரேஷ், ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பெயரை பயன்படுத்தி, கூலிப்படையினர் பணம் பறித்தது தெரிய வந்தது.ஏழு பேரையும் நேற்று கைது செய்த போலீசார், 6 கிராம் தங்க நகைகள், எட்டு மொபைல் போன்கள் மற்றும் கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். ரவுடிகளை துாண்டிவிட்டவர், நேற்று இரவு சிக்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X