பெரும்பாக்கம்; பெற்றோர் கண்டித்ததால், வீட்டை விட்டு வெளியேறிய, எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி, பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளார். அதை, போலீசார் கைப்பற்றினர்.சென்னை, ஒட்டியம்பாக்கம், ஜெ.ஜெ., தெருவைச் சேர்ந்தவர் சண்முகராஜா, 45. இவரது, 13 வயது மகள், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர், எப்போதும் மொபைல் போனில் நேரத்தை செலவழித்துஉள்ளார். இதற்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை எடுத்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை.பெரும்பாக்கம் போலீசார் விசாரித்து, வீட்டில் சிறுமி எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர்.அதில், 'என்னை காரணமின்றி, பெற்றோர் கண்டிக்கின்றனர். உயிரோடு இருப்பதைவிட, இறந்து விடலாம் என, தோன்றுகிறது. நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன். என்னை தேட வேண்டாம். எனக்கு எடுத்துக் கொடுத்த புது துணிகளை, ஆதரவற்ற இல்லங்களுக்கு கொடுங்கள்' என, எழுதப்பட்டு உள்ளது.போலீசாரின் தீவிர விசாரணையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில், சிறுமியின் இருசக்கர வாகனம் கண்டறியப்பட்டது. அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, சிறுமி எங்கு சென்றார் என, போலீசார் தேடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE