மத்திய அரசு சமூகநீதி மற்றும் தன்மேம்பாடு அமைச்சகம், அம்பேத்கர் நிறுவனத்தால் மக்களிடையே ஜாதியை ஒழிக்க, கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ரூ.2.50 லட்சம் வழங்குகிறது. இதில் பயன்பெற கலப்பு திருமணம் செய்து, ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும்.
திருமணப் பதிவுச் சான்று, மனுதாரர் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம், கூட்டு வங்கி கணக்கு விவரம், திருமணமான ஒரு ஆண்டுக்குள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பத்தை எம்.பி., எம்.எல்.ஏ., கலெக்டருக்கு பரிந்துரைக்க வேண்டும். கலெக்டர் அனுப்பும் விண்ணப்பங்களை அரசு பரிசீலனை செய்து, மத்திய அரசின் சமூக நீதித்துறைக்கு அனுப்பப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற திண்டுக்கல்லில் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இதுவரை அவர்களின் வங்கி கணக்கில் பணம் வந்து சேரவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக நிதியுதவிக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பாக யாரை தொடர்பு கொள்வது என்ற விவரங்களும் மாநில அரசுக்கு வழங்கவில்லை. அதனால் விண்ணப்பித்தவர்கள், இது தொடர்பாக யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE