பாலமேடு : பாலமேடு முதல் சாத்தையாறு அணை வரை பல இடங்களில் ரோடு சேதமடைந்திருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.தற்போதுஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ளதால் அவசரகதியில் பேட்ஜ்ஒர்க் பணி நேற்று முன் தினம் துவங்கின. நாள்முழுவதும் பெய்த மழையில் எர்ரம்பட்டி பிரிவு, கோணப்பட்டி பகுதிகளில் ரோடு பள்ளங்களில் தேங்கிய மழைநீரில் பேட்ஜ் ஒர்க் செய்தனர். தரமற்ற முறையில் செய்யப்பட்ட இந்த பேட்ஜ் ஒர்க்கால் விரைவில்ரோடு சேதமடைய வாய்ப்புகள் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE