மதுரை : மதுரை மானகிரி கால்வாயை குப்பை மூடி விட்டது. அதை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரில் 600 மீட்டர் நீளத்தில் மானகிரி, 3 கி.மீ.,ல் பந்தல்குடி, 700 மீட்டரில் பி.பி.குளம், 1.9 கி.மீ.,ல் விளாங்குடி, 13.1 கி.மீ.,ல் கிருதுமால், 450 மீட்டரில் சொக்கிக்குளம், 5.9 கி.மீ.,ல் பனையூர் கால்வாய் உட்பட 54.1 கி.மீ., நீளம் கொண்ட 13 கால்வாய்களை துார்வாரும் பணி துவங்கியது. இதற்காக ரூ.2.75 கோடி ஒதுக்கப்பட்டது. இப்பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
மானகிரி கால்வாய் குப்பையால் நிரம்பியுள்ளது. பிளாஸ்டிக், பாலிதீன், ஓட்டல் கழிவுகள் மிதக்கின்றன. சிவகங்கை ரோடு இந்திராநகர் செல்லும் வழியில் மானகிரி கால்வாய் அசுத்தமாகவுஉள்ளது. துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது.
இந்திராநகர் குடியிருப்போர் கூறியதாவது: சிலர் கால்வாயில் குப்பையை கொட்டுகின்றனர். மற்ற பகுதிகளில் இருந்து டூவீலரில் குப்பையை கொண்டு வந்தும் கொட்டுகின்றனர். ஓட்டல் கழிவுகளை கால்வாய்க்குள் போடுகின்றனர். இதை அப்புறப்படுத்த வேண்டும். மீறி குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE