பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு கரும்புகள் கொள்முதலில் முறைகேடு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
மேலுார் : ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக வழங்க விவசாயிகளிடம் இடைத்தரகர்கள் மூலம் கரும்பை குறைத்து வாங்கும் அதிகாரிகள் கூடுதல் விலைக்கு வாங்கியதாக கணக்கு சமர்ப்பிப்பதாக புகார் எழுந்துள்ளது.மேலுார் தாலுகாவில் செயல்படும் 172 பகுதி மற்றும் முழு நேர ரேஷன் கடைகளில் 92 ஆயிரம்பேர் பொங்கல் பரிசு பெறுகிறார்கள். இப்பயனாளிகளுக்கு 5 அடி நீள கரும்பு செலவுடன் ரூ.30க்கு கொள்முதல்

மேலுார் : ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக வழங்க விவசாயிகளிடம் இடைத்தரகர்கள் மூலம் கரும்பை குறைத்து வாங்கும் அதிகாரிகள் கூடுதல் விலைக்கு வாங்கியதாக கணக்கு சமர்ப்பிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மேலுார் தாலுகாவில் செயல்படும் 172 பகுதி மற்றும் முழு நேர ரேஷன் கடைகளில் 92 ஆயிரம்பேர் பொங்கல் பரிசு பெறுகிறார்கள். இப்பயனாளிகளுக்கு 5 அடி நீள கரும்பு செலவுடன் ரூ.30க்கு கொள்முதல் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் விவசாயிகளிடம் கரும்புகளை இடைத்தரகர்கள் மூலம் வாங்குகிறார்கள்.நா.கோயில்பட்டி விவசாயி வெங்கடசாமி கூறியதாவது: இடைத்தரகர்கள் ஒரு கரும்பை ரூ.12 க்கு வாங்கி அதிகாரிகளுக்கு ரூ.30க்கு வழங்குகின்றனர். கரும்பை அதிகாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்தால் மட்டுமே வாழ்வாதாரம் காப்பாற்றப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X