மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை துரிதப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மத்திய அரசுக்கு அனுப்பிய 2021 - 22 மத்திய பட்ஜெட் முன்ஆலோசனை மனுவில் வலியுறுத்தியுள்ளது.
சங்க தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை உயர்த்த கூடாது. வரி வருவாயை சமன் செய்யும் வரியை 15 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும். வரி வீதங்களை 5,10,15,18 சதவீதமாக்க வேண்டும். சொகுசு கார், ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 18 சதவீதம் வரி விதித்து, அதிகபட்ச வரியை 15 சதவீதமாக்க வேண்டும். ஜி.எஸ்.டி., கொள்கையான உள்ளீட்டு வரி வரவு வசதியின்றி எந்த பொருட்கள், சேவைகளுக்கும் வரி விதிக்க கூடாது.
பயோ டீசல், தீப எண்ணெய் வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வரையிலான சேவைகள், மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்ல 'பாய்ன்ட் ஆப் கால்' பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ள, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE