மதுரை : கொரோனா காலம் வீட்டுக்குள் முடக்கினாலும் மக்களுக்காக சேவை செய்ய களமிறங்கும் இளைஞர்களில் அதிகாலை வீடுகளுக்கு காய்கறி வினிேயாகம் செய்து, வீட்டில் ஐ.டி., நிறுவன பணி தொடரும் மதுரை எஸ்.எஸ்.காலனி சரவணன் இப்படியும் வாழ நினைத்தால் வாழலாம் என நிரூபித்துள்ளார்.
அவர் கூறியதாவது: சென்னை ஐ.டி.,நிறுவனத்தில் பணி செய்யும் நான் ஊரடங்கால் 9 மாதங்களாக காமராஜபுரம் பாட்டி வீட்டில் இருந்து பணி செய்கிறேன். மக்களுக்காக ஆரோக்கிய சேவை செய்ய நினைத்தேன். அப்போது தான் மக்களின் பிரிட்ஜ் பயன்பாட்டை குறைத்து தினமும் காய்கறி வினியோகிக்கும் ஐடியா கிடைத்தது. அதற்காக 'வைகறை வெஜிடபிள்ஸ்' குழுவை துவங்கினேன்.
நான் உட்பட 6 இளைஞர்கள் அதிகாலை 2:30 மணிக்கு மார்க்கெட் சென்று முதலாம் தர காய்கறிகளை வாங்கி 4:30க்கு வீட்டிற்கு வந்து தரம் பிரிப்போம். பேப்பர் பையில் பேக் செய்து வினியோகிப்போம். காய்கறிகளை இருப்பு வைத்து வினியோகிப்பது இல்லை.அதிக காய்கறி வாங்கினால் பிரிட்ஜில் வைப்பர் என குறைந்த அளவு காய்கறி கேட்டாலும் வாங்கி தருவோம். பிரிட்ஜில் வைக்காத வெங்காயம் உட்பட சில காய்கறிகள் வாங்கி இருப்பு வைக்கலாம்.
தத்தனேரி, டி.வி.எஸ்.நகர், தெப்பக்குளம் என எங்கள் சேவையை நாடும் பகுதிகளுக்கு கொண்டு செல்கிறோம்.காலை 7:00 மணிக்கு சேவை முடிந்தவுடன் அவரவர் பணிக்கு சென்று விடுவோம். இதில் யாருக்கும் லாபம், சம்பளம் இல்லை. சிறிய சேவை கட்டணம் மட்டும் உண்டு. ஆரோக்கிய உணவு பழக்கம் ஏற்படுத்துவதே நோக்கம், என்றார்.
தொடர்புக்கு 74486 60807
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE