பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர், துணை முதல்வருக்கு மதுரையில் வரவேற்பு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கள்ளிக்குடி : துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு சென்னை செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் வரும் சிறிது நேரத்திற்கு முன் பெய்யத்தொடங்கிய மழையையும்

கள்ளிக்குடி : துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு சென்னை செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வர் வரும் சிறிது நேரத்திற்கு முன் பெய்யத்தொடங்கிய மழையையும் பொருட்படுத்தாமல் கள்ளிக்குடி முதல் சிவரக்கோட்டை வரை சாலையின் ஓரத்தில் நின்ற பெண்கள், 27 அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள்,கட்சியினர் வரவேற்பளித்தனர்.முதல்வர், துணை முதல்வர் ஒரே காரில் பின் சீட்டில் அமர்ந்தபடி வந்தனர். முதல்வரின் கார் கடந்து சென்றபின்னரும் கள்ளிக்குடி முதல் சிவரக்கோட்டை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கப்பலுார் டோல்கேட்டிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X