வாஷிங்டன் : பாகிஸ்தான், பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதால், அந்த நாட்டுக்கான, எம்.என்.என்.ஏ., அந்தஸ்தை நீக்க வகை செய்யும் மசோதா, அமெரிக்க பார்லியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாக்., உள்ளிட்ட, 17 நாடுகளுக்கு, எம்.என்.என்.ஏ., எனப்படும், முக்கியமான அணி சேரா நேச நாடுகள் என்ற அந்தஸ்தை, அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்த தகுதி பெற்ற நாடுகள், அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் பங்கு கொள்ளலாம். குறிப்பிட்ட சில பயங்கரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படலாம். பீரங்கி எதிர்ப்பு குண்டுகளை தயாரிக்க, வீரியம் குறைந்த யுரேனியத்தை வாங்கலாம். நிர்ணயிக்கப்பட்டதை விட, கூடுதல் ராணுவ தளவாடங்களை, அமெரிக்காவிடம் பெறலாம்.
இது தவிர, வெளிநாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் உள்ள ஆயுதங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன், ஒரு சில ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்யவோ அல்லது குத்தகைக்கு பெறவோ கடன் வசதி கோரலாம். மேலும், விண்வெளி தொழில்நுட்பத்தை பெறவும், அயல்நாட்டில், அமெரிக்க ராணுவ தளவாடங்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளலாம்.இத்தகைய பயன்களை இனி பாக்., பெறக் கூடாது என்பதை வலியுறுத்தி, அந்நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள, எம்.என்.என்.ஏ., அந்தஸ்தை நீக்கும் மசோதா, அமெரிக்க பார்லியின் பிரதிநிதிகள் சபையில்,
நேற்று, தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மசோதாவில், பாக்., தொடர்ந்து, 'ஹக்கானி' உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு செய்து வரும் உதவி, பயங்கரவாதிகளுக்கு, ஐ.எஸ்.ஏ., உளவுப் பிரிவு அளிக்கும் ஆதரவு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. ஹக்கானி பயங்கரவாத தலைவர்களை கைது செய்து, அந்த அமைப்பிற்கு எதிராக, பாக்., நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமெரிக்க அதிபர் சான்றளிக்க வேண்டும் என்றும், மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேறினால், இனி, அமெரிக்க அதிபர் சான்று அளித்தால் மட்டுமே, பாக்.,கிற்கு., எம்.எம்.என்.ஏ., அந்தஸ்து கிடைக்கும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, உலக அரங்கில் பாகிஸ்தானை, மேலும் தனிமைப்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பெண்கள் கல்விக்கு ஊக்கத் தொகை பாகிஸ்தானில், பெண்களின் உயர்கல்விக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை திட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் 'மலாலா யுசப்சை மசோதா' அமெரிக்க 'செனட்' சபையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. அதிபர், டிரம்ப் கையொப்பத்திற்குப் பின், இந்த மசோதா சட்ட வடிவம் பெற்று, அமலுக்கு வரும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE