இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்

Updated : ஜன 05, 2021 | Added : ஜன 05, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
லண்டன்: இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா பரவி வருவதையொட்டி நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.பிரிட்டனில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு பாதிப்பும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதன்காரணமாக பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்கு
UK_PM, BorisJohnson, Lockdown, England, இங்கிலாந்து, ஊரடங்கு, போரிஸ் ஜான்சன்

லண்டன்: இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா பரவி வருவதையொட்டி நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு பாதிப்பும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதன்காரணமாக பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும் புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுடங்காமல் பரவியதால், இங்கிலாந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.


latest tamil news


இந்த தேசிய அளவிலான ஊரடங்கு ஆறு வாரங்களுக்கு நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. நள்ளிரவு முதல் அமலான ஊரடங்கால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெறும் என்ற போரிஸ் ஜான்சன், மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், இங்கிலாந்து மக்கள், வீட்டிலேயே பத்திரமாக இருக்க வேண்டும் எனவும், இந்த ஊரடங்கு புதிய வகை கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் என நம்பிக்கையுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANTONYRAJ - MADURAI,இந்தியா
05-ஜன-202115:31:48 IST Report Abuse
ANTONYRAJ இங்கிலாந்தில் மறுபடியும் வெறிபிடித்தாடுகின்றது கொரோனா, பெருகிவரும் பாதிப்புகளை அடுத்து வேறுவழியின்றி கடும் லாக் டவுணுக்குள் பிரிட்டன் சிக்கிவிட்டது, லண்டனும் பிரதான நகரங்களும் வெறிச்சோடி கிடக்கின்றன.ஒரே நாளில் 60 ஆயிரம் பேருக்கு பாதிப்பு என்பது பிரிட்டனை அதிர வைத்திருக்கும் செய்தி. அமெரிக்காவின் நிலையோ இன்னும் மோசம். லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பகுதிகளில் கல்லறைகள் நிறைந்துவிட்டதால் பலியானோர் உடலை குளிர்பெட்டியில் போட்டுவைத்து புதிய கல்லறைக்காக காத்துகொண்டிருகின்றார்கள். அங்கு சராசரி சாவு எண்ணிக்கை ஒரு நாளுக்கு 2500 என்ற அளவில் அமெரிக்காவினை வாட்டிக் கொண்டிருக்கின்றது. ஒருவித விபரீத காலத்தில் சிக்கியிருக்கின்றன, பிரிட்டனும் அமெரிக்காவும்.இந்த இரண்டு நாடுகளும் இதிலிருந்து மீண்டு வர இறைவனை பிரார்த்திப்போம்.
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
05-ஜன-202114:49:47 IST Report Abuse
ShivRam ShivShyam இவர் குடியரசு தினத்திற்கு வருவாரா .. இல்லையா ? வராமல் இருப்பதே நல்லது
Rate this:
Cancel
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
05-ஜன-202113:06:03 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ நம்மஊர்லாம் கூட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்னமும் இருப்பதாக சட்டம்(மட்டுமே) சொல்கிறது, ஆனா பலபேர் மாஸ்க்க தளரவுட்டே பலமாசமாச்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X