சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் வாக்குவாதம்: தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் நாற்காலி வீச்சு; எஸ்.ஐ., காயம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
மொடக்குறிச்சி: கொடுமுடி அருகே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில், தி.மு.க.,- அ.தி.மு.க., நிர்வாகிகள், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சேர்களை வீசிக்கொண்டனர். இதில் எஸ்.ஐ., காயமடைந்தார்.ஈரோடு மாவட்டம், கொடுமுடி யூனியன், பாசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 1,300 பயனாளிகளுக்கு, பொங்கல் இலவச தொகுப்பு, 2,500 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதை வழங்க,

மொடக்குறிச்சி: கொடுமுடி அருகே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில், தி.மு.க.,- அ.தி.மு.க., நிர்வாகிகள், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சேர்களை வீசிக்கொண்டனர். இதில் எஸ்.ஐ., காயமடைந்தார்.


ஈரோடு மாவட்டம், கொடுமுடி யூனியன், பாசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 1,300 பயனாளிகளுக்கு, பொங்கல் இலவச தொகுப்பு, 2,500 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதை வழங்க, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி, நிர்வாகிகளுடன் பாசூர் வந்தார். எம்.எல்.ஏ., வருகையையொட்டி கட்சிக்கொடி கட்டி, மைக் செட்டு அமைத்தனர். இதை பார்த்த, தி.மு.க.,வினரும், தங்கள் கட்சி கொடிகளை கட்டினர். எம்.எல்.ஏ., பொங்கல் தொகுப்பு வழங்கும்போது, எம்.ஜி.ஆர்., பாடல் ஒலிபரப்பானது. இதை நிறுத்தும்படி அங்கிருந்த தி.மு.க.,வினர் கூறினர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. எம்.எல்.ஏ., முன்னிலையில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் சேர்களை வீசி எறிந்தனர். பாதுகாப்பில் இருந்த மலையம்பாளையம் போலீசார் தடுத்தனர். இதில் எஸ்.ஐ., வரதராஜனுக்கு மூக்கில் லேசான காயம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் கவிதாலட்சுமி தலைமையிலான போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, பாசூர் தொடக்க கூட்டுறவு வங்கி இயக்குனர் கோபால்ராசு, பாசூர், தி.மு.க., செயலாளர் ராமமூர்த்தி, வங்கி உதவி தலைவர் சக்திவேல், தி.மு.க., நிர்வாகி பழனிச்சாமி, ரங்கசாமி ஆகியோரை, மலையம்பாளையம் ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பின் ஐந்து பேர் மீதும், கொலை மிரட்டல் பிரிவில் வழக்குப்பதிவு செய்து ஜாமினில் விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X