அரூர்: வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து குறைந்ததால், நேற்று, தடுப்பணையிலிருந்து வினாடிக்கு, 70 கன அடி உபரி நீர், வரட்டாற்றில் திறக்கப்பட்டது. அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள சித்தேரி மலையில் இருந்து, தடுப்பணைக்கு நீர்வரத்து உள்ளது. இதிலிருந்து, திறந்து விடப்படும் நீரால், தாதரவலசை, கீரைப்பட்டி, கௌாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும். இந்நிலையில், புயல் மழையின்போது, கடந்த மாதம், 7ல், தடுப்பணையின் மொத்த கொள்ளளவான, 34.45 அடி நிரம்பி, உபரி நீர் வரட்டாற்றில் செல்கிறது. சில நாட்களுக்கு முன், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்ததால், கடந்த, 31ல், தடுப்பணைக்கு, 158 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.நேற்று காலை, 6:00 மணிக்கு, தடுப்பணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 70 கன அடியாக குறைந்ததது. இந்த உபரி நீர், அப்படியே வரட்டாற்றில், பழைய ஆயக்கட்டு வழியாக மாவேரிக்கு செல்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE