சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பிரச்னைக்கு தீர்வு இல்லை: இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: தடவழி பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால், கலெக்டர் அலுவலக வளாகத்தில், இளம்பெண் தீக்குளிக்க முயன்றார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், பசவண்ணக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மா, 55; இவரது மகள் சம்பங்கி, 30; திருமணம் ஆகாதவர்; தனியாக வசிக்கும் தாயும் மகளும், 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்று வருகின்றனர். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், ஊர்கவுண்டர் பைரப்பன்

கிருஷ்ணகிரி: தடவழி பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால், கலெக்டர் அலுவலக வளாகத்தில், இளம்பெண் தீக்குளிக்க முயன்றார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், பசவண்ணக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மா, 55; இவரது மகள் சம்பங்கி, 30; திருமணம் ஆகாதவர்; தனியாக வசிக்கும் தாயும் மகளும், 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்று வருகின்றனர். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், ஊர்கவுண்டர் பைரப்பன் என்பவரிடம், ஒன்றே முக்கால் சென்ட் இடத்தை வாங்கி, அதில், ஓட்டு வீடு கட்டியுள்ளனர். வீட்டிற்கு செல்ல, ஐந்து அடி பாதை உள்ளது. இதை பயன்படுத்தக்கூடாது என, பக்கத்து வீட்டுக்காரர் ஸ்ரீராமுலு என்பவர், இவர்களை தாக்கியதாக கூறி, இவர்கள் அளித்த புகாரை, கந்திகுப்பம் போலீசார் பெறவில்லை. இதனால், வேதனையடைந்த அவர்கள், நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு சம்பங்கி, தான் கொண்டு வந்த கேனில் இருந்த மண்ணெண்ணெய்யை தன் மேல் ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர், தாய் மற்றும் மகள் இருவரையும் விசாரணைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X