விழுப்புரம்: விழுப்புரம் முத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் குமார், 43; கொத்தனார். புதுச்சேரி, குச்சிப்பாளையத்தில் மாமியார் வீட்டில் வசிக்கிறார். கோகுல், 12, என்ற மகன், 5 வயதில் மகள் உள்ளனர்.நேற்று முன்தினம் மாலை, குமார், மனைவியுடன் வெளியில் சென்று திரும்பி வந்த போது, வீடு பூட்டி இருந்ததால், கதவை தட்டினார். வெகுநேரம் கதவை திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்தார். மகன் கோகுல், வீட்டின் கதவில் இருந்த ஸ்கிரீன் துணி கழுத்தில் இறுக்கிய நிலையில், சேரில் சடலமாக கிடந்தார். துணியை கழுத்தில் சுற்றி விளையாடியபோது, துணி இறுக்கி உயிரிழந்தது தெரிந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE