பொது செய்தி

இந்தியா

வேளாண் சட்டங்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: ரிலையன்ஸ்

Updated : ஜன 05, 2021 | Added : ஜன 05, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டங்களுக்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.புதிய வேளாண் சட்டங்களின் பயனாளியாக இருப்பதாக ரிலையன்ஸ் தொழில் நிறுவனம் விவசாயிகளின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது, இதனால் தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் நாங்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை வாங்குவதில்லை, அதுமட்டுமில்லாமல் எந்த விவசாய
Reliance, FarmLaws, NothingToDo, ரிலையன்ஸ், விவசாயிகள், வேளாண் சட்டம், சம்பந்தம் இல்லை

புதுடில்லி: வேளாண் சட்டங்களுக்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களின் பயனாளியாக இருப்பதாக ரிலையன்ஸ் தொழில் நிறுவனம் விவசாயிகளின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது, இதனால் தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் நாங்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை வாங்குவதில்லை, அதுமட்டுமில்லாமல் எந்த விவசாய ஒப்பந்தங்களிலும் இதுவரை ஒப்பந்தம் செய்யவில்லை என தெரிவித்துள்ளது. இதைப்பற்றி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:


latest tamil news


தற்போதைய 3 வேளாண் சட்டங்களுக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. வேளாண் சட்டங்களால் நாங்கள் எந்த விதத்திலும் பயனடையப் போவதில்லை. வேளாண் சட்டங்களின் பயனாளியாக இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது விவசாயிகளின் கோபம் திரும்பியுள்ளது. இதற்கு உடனடியாக அரசு அதிகாரிகளின் தலையீடு தேவை. நாங்கள் எந்தவித விவசாய ஒப்பந்தங்களிலும் சம்பந்தப்படவில்லை.

அதுமட்டுமல்லாமல் நாங்கள் பஞ்சாபிலோ, ஹரியானாவிலோ அல்லது இந்தியாவின் வேறு எந்த இடத்திலும் விவசாய நிலங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாங்கவில்லை, இதனால் சம்மந்தமே இல்லாமல் வேளாண் சட்டங்களை எங்களுடன் இணைத்து பேசுவது எங்களுடைய வணிகங்களுக்கும், எங்களுடைய நற்பெயருக்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nizamudin - trichy,இந்தியா
06-ஜன-202106:07:47 IST Report Abuse
nizamudin சரி மற்ற விஷயங்களில் உண்டு போல தெரிகிறது இந்திய அரசங்கத்தையே ஆட்டி படைத்தது கொண்டு இருக்கிறீர்கள்
Rate this:
Cancel
Naduvar - Toronto,கனடா
05-ஜன-202123:16:21 IST Report Abuse
Naduvar நம்பிட்டோம்...இது நம்ம மஸ்தான் வேலை...யாரும் 2016 காசுஎடுக்க ரோட்டில் நினைத்தை மறந்துராதீங்க
Rate this:
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
05-ஜன-202121:47:32 IST Report Abuse
THANGARAJ JIO மார்ட் விற்கப்படும் விவசாய பொருள்கள் இந்தியாவில் இருந்து வாங்கவில்லை என சொல்லுவார்கள் , அதற்கான சரக்கு சேமிப்பு நிலையமும் இந்தியாவில் இல்லை என்பார்கள். அனால் சமையல் பொருட்கள் மட்டும் இந்தியர்களுக்காக குறைந்த விலை (இப்போதே அரிசி விலை 100 க்கு மேல் உள்ளது ) விற்கப்படுகிறது என்பார்கள். இந்தியர்களை வாங்கும் (Buying) / வாங்க வைக்கும் பொருளாதாரமாக மாற்றிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X