தமிழ்நாடு

சம்பளமாக கிடைத்தது ரூ.7,500 : கொரோனா உருவாக்கிய மாற்றம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
ஆசிரியை வேலையை இழந்த போது, என்ன செய்வதென்று திகைத்தவர், மாதம் லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். ''எல்லாம் கொரோனாவின் திருவிளையாடல்,'' என்கிறார், சுபாஷினி, 32.மயிலாப்பூர், ஆர்.கே.மடம் சாலை, - வெங்கடேஷ்வரா அக்ரஹாரம் சந்திப்பில், 'மயிலை காபி ஹட்' என்ற பெயரில், மூலிகை தேனீர் கடையை சமீபத்தில் துவக்கியுள்ளார், இவர்.இளங்கலை இயற்பியல் பாடத்தில் பட்டம் பெற்றவர். தனியார்
 சம்பளமாக கிடைத்தது ரூ.7,500 :  கொரோனா உருவாக்கிய மாற்றம்

ஆசிரியை வேலையை இழந்த போது, என்ன செய்வதென்று திகைத்தவர், மாதம் லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். ''எல்லாம் கொரோனாவின் திருவிளையாடல்,'' என்கிறார், சுபாஷினி, 32.

மயிலாப்பூர், ஆர்.கே.மடம் சாலை, - வெங்கடேஷ்வரா அக்ரஹாரம் சந்திப்பில், 'மயிலை காபி ஹட்' என்ற பெயரில், மூலிகை தேனீர் கடையை சமீபத்தில் துவக்கியுள்ளார், இவர்.இளங்கலை இயற்பியல் பாடத்தில் பட்டம் பெற்றவர். தனியார் பள்ளியில் ஆசிரியை வேலை. மாதம், 7,500 ரூபாய் சம்பளம். சாதாரணமாக நகர்ந்து கொண்டிருந்த வாழ்க்கையை, கொரோனா தொற்று திருப்பிப் போட்டது. வேலையை இழந்தார்; வீட்டிலேயே பத்து ஆண்டுகளாக எடுத்து வந்த டியூசனும் கைநழுவியது. கொரோனா தொற்று மீது ஆத்திரம் உருவானது.

மூலிகைகளே, உடல் நலத்துக்கு உறுதுணை என்பது, சிறு வயதில் சுபாஷினி கற்றுக் கொண்ட பாடம். அதையே, தொழிலாக மாற்றும் யோசனை வந்தது. குடும்பத்தாரும் ஆமோதித்தனர். முதலீடுக்கு, நகைகள் உதவின. அவற்றை அடகு வைத்தில், 5 லட்சம் ரூபாய் வந்தது. இப்படித்தான், மூன்று மாதத்திற்கு முன், உருவானது, மூலிகை தேனீர் கடை. அதிகாலை, 6:30 மணிக்கு திறக்கப்படும் கடை, இரவு, 9:00 மணி வரை இயங்குகிறது.

டீ ரசிகர்கள் மத்தியில், 'மூலிகை தேனீர்' என்பது கவனத்தை கவர்ந்தது. ஆரம்பத்தில் சுமாராக விற்பனையானது; இப்போது களைகட்டி நிற்கிறது. விபரம் அறிந்து, வாடிக்கையாளர்கள் தேடி வருகின்றனர். ''மாதம், 80 ஆயிரம் முதல், 1 லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. இன்னும் லாப கணக்கு பார்க்கவில்லை,'' என்றார், சுபாஷினி.

'ஒரு பெண்ணாக கடை நடத்துவது சிரமம். குழந்தையை கவனிக்க முடியாது. கடையை வேறு யாருக்காவது கொடுத்து விடு' என சொன்னவர்கள் அதிகம். பிடிவாதமாக, தன்னம்பிக்கைஉடன் நடத்தியே தீருவது என முடிவெடுத்ததாக கூறும் சுபாஷினி, ''விரைவில், கடனை அடைத்து நகையை மீட்க வேண்டும்; அதற்கு பிறகு தான் லாப கணக்கு,'' என, புன்னகைத்தார். 'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ் வையகம் தழைக்குமாம்' என்று, புதுமைப் பெண்கள் குறித்த பாரதியின் கனவை மெய்ப்பிப்பதில், சுபாஷினிக்கு மட்டற்ற மகிழ்ச்சி.


வியாபாரமும், அதிரடியும்

வருமானத்துக்கு டீ கடை போடுவது சாதாரண வியாபாரம். அதையே மூலிகை தேனீர் கடையாக மாற்றினால், அதிரடி வியாபாரம். சுபாஷினியின் கடையில், பிளாக், மசாலா, இஞ்சி, லெமன், லெமன் ஹனி, மூலிகை, புதினா போன்ற விதவிதமான டீ வகைகள் கிடைக்கின்றன. காபியிலும், ஏலக்காய், சுக்குமல்லி, கருப்பட்டி, பிளாக் போன்றவை கிடைக்கிறது. இது தவிர பாதாம் பால், மஞ்சள் மிளகு பால் வகைகள், காய்கறி கட்லெட் உள்ளிட்ட நொறுக்கு தீனிகள் எந்த நேரமும் கிடைக்கும். அவித்த சுண்டல், வேர்க்கடலை, சோளம் போன்ற அறிமுகம் இல்லாத, அதே நேரம் உடல் ஆரோக்கியத்துக்கான நொறுக்கு தீனிகளுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X