![]()
|
இவர் இறந்த போது திரண்ட கூட்டம் இவர் செய்த சேவைக்கு கட்டியம் கூறி நின்றது.
இவர் பற்றிய செய்தியை படித்த சென்னையில் உள்ள அகில இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விற்பனையாளர் சங்க தலைவர் முகேஷ் குப்சந்தானி ,ஏழையாக இருந்த ராமு தாத்தாவே பத்து ரூபாய் சாப்பாடு போட்டு இருக்கும் போது ஒரளவு வசதியாக இருக்கும் நாம் ஏன் பத்து ரூபாய்க்கு சாப்பாடு போடக்கூடாது என்று சிந்தித்தார்.
![]()
|
சிந்தித்ததை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார். நல்ல அரசி தரமான காய்கறிகளுடன் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தொழிலாளர்கள் நிறைந்த சிங்கண்ண செட்டி தெருவில் பத்து ரூபாய் சாப்பாடு வழங்க துவங்கினார்.
ஒருவர் நன்றாக சாப்பிடும் அளவிற்கு சாப்பாடு சாம்பார் ரசம் மோர் ஒரு கூட்டு என்று ஒரு பையில் போட்டு அந்த பை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யபப்டுகிறது.
முதல் நாள் நுாறு பாக்கெட் போட்டார் எல்லாம் காலியாகிவிட்டது இரண்டு மாதங்களில் இதன் விற்பனை இப்போது முன்னுாற்று ஐம்பதில் வந்து நிற்கிறது.மதியம் ஒரு மணி முதல் சாப்பாடு தீரும் வரை கிடைக்கும்.சாப்பாடு பெரும்பாலும் மிஞ்சுவதே இல்லை.
திங்கள் செவ்வாய் சாப்பாடு புதன் சாம்பார் சாதம் வியாழன் வெள்ளி சாப்பாடு சனியன்று பிரிஞ்சு என்று வாரத்தில் ஆறு நாள் வெரைட்டியாக கொடுக்கிறார் சாப்பாட்டிலும் ஒரு நாள் சாம்பார் ஒரு நாள் காரக்குழம்பு ஒரு நாள் மோர்க்குழம்பு என்று அசத்துகிறார்.
பல நாள் நானும் இந்த சாப்பாட்டைத்தான் சாப்பிடுகிறேன் என்பதால் சமையல் கலைஞர்கள் எப்போதும் கவனத்துடன் இருப்பர்.
என் தாய் தந்தை மற்றும் குருநாதர் எல்லாம் அன்பை பகிர்நது கொள் அது பலமடங்காக திரும்பிவரும் என்பார்கள் என்னால் முடிந்தளவிற்கு அன்பை பகிர்ந்து கொளளும் செயல்தான் இது.
என்னால் இலவசமாகவே இந்த உணவு பாக்கெட்டை கொடுக்கமுடியும் ஆனால் இலவசம் என்றால் வாங்கும் மக்களிடையே அலட்சியம் வந்துவிடும் உணவை வீணாக்குவார்கள் மேலும் இலவசமாகப் பெற சிலரது சுயமரியாதை இடம் கொடுக்காது ஆகவே பத்து ரூபாய் விலை வைத்துள்ளேன் பத்து ரூபாய் சாப்பாடுதானே என்றும் ஏளனமாக நினைத்துவிட வேண்டாம் வீட்டு சாப்பாடு போன்ற தரமுடையது கொடுக்கும் பணத்தைவிட பல மடங்கு மதிப்புமிக்கது.
அன்றாடம் ஆயிரம் பேர் வந்தாலும் சாப்பாடு பாக்கெட் கொடுக்கமுடியும் அதற்கான சக்தியை இறைவன் தந்துள்ளான் என்று கூறிய முகேஷிடம் பேசுவதற்கான எண்:98400 58366.
-எல்.முருகராஜ்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement