புதுடில்லி: குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ஒரே நாடு, ஒரே எரிவாயு கட்டமைப்பு திட்டத்தின் கீழ், ரூ.3,000 கோடி மதிப்பில் கொச்சி - மங்களூரு இடையே சுமார் 450 கி.மீ. வரையிலான குழாய் வழியாக இயற்கை எரிவாயுவை வினியோகிக்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி டில்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை, நாடளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: 450 கி.மீ தூரமுள்ள இயற்கை எரிவாயு குழாய்த் திட்டத்தை தேசத்திற்கு அர்ப்பணிப்பதில் பெருமையடைகிறேன். இது இந்தியாவுக்கு, குறிப்பாக கர்நாடகா மற்றும் கேரள மக்களுக்கு ஒரு முக்கியமான நாள். முந்தைய பல ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான காரணங்களைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால், மெதுவாக முன்னேற்றமடைந்து வந்த இந்தியாவில், சமீபத்திய ஆண்டுகளில் அதன் வேகமும், வளர்ச்சியின் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE