பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் தொடரும் மழை; பாலவிடுதியில் 15 மி.மீ., பதிவு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டத்தில், மழை மீண்டும் பெய்ய துவங்கியுள்ளது. பால விடுதியில், அதிகபட்சமாக, 15 மி.மீ., மழை பதிவாகியுள் ளது. தமிழகத்தில் காற்றின் திசை வேக மாறுபாட்டால், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் அதிகாலை முதல் மழை பெய்ய துவங்கியது. நேற்று காலை, 8:00 மணிநிலவரப்படி, மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,): கரூர், 2.4, அரவக்குறிச்சி, 12,

கரூர்: கரூர் மாவட்டத்தில், மழை மீண்டும் பெய்ய துவங்கியுள்ளது. பால விடுதியில், அதிகபட்சமாக, 15 மி.மீ., மழை பதிவாகியுள் ளது. தமிழகத்தில் காற்றின் திசை வேக மாறுபாட்டால், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் அதிகாலை முதல் மழை பெய்ய துவங்கியது. நேற்று காலை, 8:00 மணி


நிலவரப்படி, மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,): கரூர், 2.4, அரவக்குறிச்சி, 12, அணைப்பாளையம், 10, க.பரமத்தி, 5.4, குளித்தலை, 2, தோகைமலை, 2, கிருஷ்ணராயபுரம், 2.2, மாயனூர், 3, பஞ்சப்பட்டி, 3.2, கடவூர், 12, பாலவிடுதி, 15, மயிலம்பட்டி, 9. சராசரியாக, 6.52 மி.மீ., பதிவானது.

* க.பரமத்தி கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 20 கன அடியாக இருந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.68 அடியாக இருந்தது. அணைப்பகுதியில், 3.2 மி.மீ., மழை பெய்துள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஆத்துப்பாளையம் அணை நாளை நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால், மீண்டும் நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

* திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 916 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில், 800 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 89.41 அடியாக இருந்தது. அணை பகுதியில், 6 மி.மீ., மழை பெய்துள்ளது.


* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 4,760 கன அடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிகளுக்கு, 4,040 காவிரியாற்றில், கன அடி தண்ணீரும், மூன்று கிளை வாய்க்காலில், 720 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. அணை பகுதிகளில், 3 மி.மீ., மழை பெய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X