பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடையில் வழங்குவதால் கரும்பு விலை உயர்வு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கரூர்: பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் விலையில்லாத கரும்பு வழங்கப்படுகிறது. இதனால், வெளி மார்க்கெட்டில் கரும்பு விலை திடீரென உயர்ந்துள்ளதுபொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில், அனைத்து ரேஷன் கடைகளிலும், அரிசி, வெல்லம், முழு நீள கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் மற்றும் 2,500 ரூபாயை வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கூட்டுறவு துறை மூலம்

கரூர்: பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் விலையில்லாத கரும்பு வழங்கப்படுகிறது. இதனால், வெளி மார்க்கெட்டில் கரும்பு விலை திடீரென உயர்ந்துள்ளது


பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில், அனைத்து ரேஷன் கடைகளிலும், அரிசி, வெல்லம், முழு நீள கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் மற்றும் 2,500 ரூபாயை வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கூட்டுறவு துறை மூலம் விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், செங்கரும்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நடப்பாண்டு விலை உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை, செங்கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதில்லை. இதனால், ஈரோடு மாவட்டத்தில் சிவகிரி, கொடுமுடி, ஊஞ்சலூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் திருகாட்டுப் பள்ளி, மதுரை மாவட்டத்தில் மேலூர், திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் நன்கு விளைந்த, 10 கரும்புகள் கொண்ட கட்டு, 250 முதல், 300 ரூபாய் வரை விற்றது. தற்போது, 400 முதல், 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கரும்பு, 50 ரூபாய் வரை விற்பனையாகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு, இரண்டு அடி நீளமுள்ள கரும்பு வழங்கப்பட்டது. நடப்பாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலம், விலையில்லாமல் முழு கரும்பு வழங்குகிறது. இதனால், கூட்டுறவு துறையை சேர்ந்த அதிகாரிகள் விவசாயிகளை நேரில் சந்தித்து, செங்கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்து விட்டனர். மார்க்கெட்டுக்கு வரும் கரும்பின் அளவு குறைந்து, விலை அதிகரித்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X