நாமக்கல்: நாமக்கல்லில், தமிழ்நாடு, '108' அவசரகால ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களை, 24 மணி நேரம் இயக்குவதற்கு பதிலாக, 12 மணி நேரம் மட்டும் இயக்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கையை, ஒப்பந்த நிறுவனம் கைவிட வேண்டும். ஒரே டிரைவரையும், ஒரு அவசர மருத்துவ உதவியாரையும் வைத்து இரண்டு ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டதாக ஒரு பங்கு ஊதியத்தை கையாடல் செய்யக்கூடாது. அரசு களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர சம்பள உயர்வு மற்றும் பிற பணப் பலன்களை, ஒப்பந்த நிறுவனம் முறைகேடு செய்ததை தட்டிக்கேட்ட தொழிற்சங்கத்தினர் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோவை மண்டல செயலாளர் சிவக்குமார், மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE