பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் தொழில் நுட்ப முகமை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், வேளாண் தொழில் நுட்ப மேலாண் முகமை அலுவலர்கள், ஒரு நாள் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும், பிரதமரின் வேளாண் உதவித் தொகை திட்டத்தில், 110 கோடி ரூபாய் அளவில், முறைகேடு நடந்தது. விவசாயிகள் அல்லாதோருக்கு, போலியான ஆவணங்கள் மூலம் உதவித்தொகை வழங்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். அதற்கு, வேளாண் துறை சார்ந்த

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், வேளாண் தொழில் நுட்ப மேலாண் முகமை அலுவலர்கள், ஒரு நாள் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும், பிரதமரின் வேளாண் உதவித் தொகை திட்டத்தில், 110 கோடி ரூபாய் அளவில், முறைகேடு நடந்தது. விவசாயிகள் அல்லாதோருக்கு, போலியான ஆவணங்கள் மூலம் உதவித்தொகை வழங்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். அதற்கு, வேளாண் துறை சார்ந்த அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, ஒரு சிலர் சஸ்பெண்ட், இடமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், தமிழகம் முழுவதும், வேளாண் துறை சார்ந்த தொழில் நுட்ப மேலாண் முகமை அலுவலர்களும், ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், 35 பேருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. அச்சங்கத்தினர், சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது. ஆனால், அந்த உத்தரவை பின்பற்றுவதற்கு, அதிகாரிகள் தயங்குகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழில் நுட்ப மேலாண் முகமை அலுவலர்கள், நேற்று மாநிலம் முழுவதும், ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும், 30க்கும் மேற்பட்டோர், கலெக்டர் மெகராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X