பொது செய்தி

இந்தியா

‛ஆந்திராவில் ஹிந்து கோவில்களை காப்பாற்றுங்கள்' : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 05, 2021 | கருத்துகள் (185)
Share
Advertisement
ஐதராபாத்: ஆந்திராவில் ஹிந்து கோவில்களில் உள்ள சிலைகள் தொடர்ந்து பல மாதங்களாக சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து ஆந்திராவில் கோவில்களை காப்பாற்றுமாறு டுவிட்டரில் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் #SaveTemplesInAP என்னும் ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது.ஆந்திராவில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தில், 400 ஆண்டுகள் பழமையான,
SaveTemplesInAP,  HinduGods, Idols, Andhra, Temples, Twitter, Trending, ஆந்திரா, கோவில்கள், சிலைகள், சேதம், டுவிட்டர், டிரெண்டிங்

ஐதராபாத்: ஆந்திராவில் ஹிந்து கோவில்களில் உள்ள சிலைகள் தொடர்ந்து பல மாதங்களாக சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து ஆந்திராவில் கோவில்களை காப்பாற்றுமாறு டுவிட்டரில் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் #SaveTemplesInAP என்னும் ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது.

ஆந்திராவில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தில், 400 ஆண்டுகள் பழமையான, ராமதீர்த்தம் கோவில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவிலில் உள்ள ராமர் சிலையை, விஷமிகள் சிலர், சமீபத்தில் சேதப்படுத்தினர். அதேபோல் அங்குள்ள ராஜ மூர்த்தி சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் சேதப்படுத்தப்பட்டது. அடுத்த சில நாட்களில் விஜயவாடாவில் உள்ள சீதாராமர் கோவிலில் உள்ள களிமண்ணால் ஆன சீதா தேவி சிலை, மற்றொரு கோவிலில் இருந்த கேது சிலை ஆகியவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


கோவில்களில் சிலைகள் சேதப்படுத்தப்படுவது கடந்த சில மாதங்களாகவே ஆந்திராவில் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களாக அரங்கேறி வருகிறது. இதற்கு தெலுங்கு தேசம், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ‛சுவாமி சிலைகள், விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டு, ஹிந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பாக, இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. முதல்வர் ஜெகன்மோகன் கிறிஸ்துவர் என்பதற்காக, தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மத மாற்றத்தில் ஈடுபடக் கூடாது. அப்படி செய்வது, ஹிந்துக்களுக்கு துரோகம் இழைப்பதாகும்,' என தனது கண்டனத்தை பதிவு செய்தார்.


latest tamil news


ஆந்திராவில் கடந்த 18 மாதங்களில் இதுவரை 127 கோவில்களில் இவ்வாறு சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5, 6 கோவில்களில் இச்சம்பவங்கள் நடந்துள்ளன. தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை கண்டித்தும், கோவில்களில் உள்ள ஹிந்து சிலைகளை பாதுகாக்குமாறும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை ஜெகன்மோகன் தலைமையிலான அரசு கைது செய்தது. ஹிந்து சிலைகள் மீதான தாக்குதல்களை விஷமிகள் நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் குரல்கள் எழுந்துள்ளன.


latest tamil news


இது குறித்த சம்பவங்களை டுவிட்டரில் பகிர்ந்து பலரும் கோவில்களை காப்பாற்றுமாறு #SaveTemplesInAP என்னும் ஹேஸ்டேக்கில் குரல் கொடுத்து வருகின்றனர். சிலர், கடந்த செப்டம்பரில் 60 ஆண்டு பழமையான பாரம்பரியமிக்க கோவில் தேர் தீவைக்கப்பட்டது, 12ம் நூற்றாண்டு நந்தி சிலை உடைப்பு என அடுத்தடுத்து கோவில்களில் சம்பவங்கள் நிகழ்வதால், ஆந்திராவில் கோவில்களுக்கு ஆபத்து' என பதிவிட்டுள்ளனர். சிலர், ‛இது ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து கடவுள்களின் மீது விஷமிகள் நடத்தும் கொடூர தாக்குதல் எனவும், இதற்காக நிச்சயம் விஷமிகள் தண்டிக்கப்படுவார்கள்,' எனவும் பதிவிட்டு வருகின்றனர்.


latest tamil news


ஹிந்து கோவில்களில் விஷமிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த சகித்துக்கொள்ள முடியாத செயலை கண்டித்தும், டுவிட்டரில் பகிர்ந்து வருவதால் #SaveTemplesInAP என்னும் ஹேஸ்டேக் டிரெண்டானது. இதுவரை ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு மேல் இந்த ஹேஸ்டேக் மூலமாக ஆந்திராவில் கோவில்களை காப்பாற்றுமாறு குரல் கொடுத்து வருகின்றனர்.


வாசகர்கள் கவனத்திற்கு

ஆந்திர மாநில வாசகர்களே , உங்கள் பகுதியில் ஹிந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தால், அவற்றின் புகைப்படங்களை, கோவில் விவரங்களுடன் கீழ்கண்ட இமெயில் முகவரிக்கு அனுப்புங்கள்
Email: dotcomdept@dinamalar.in

Advertisement
வாசகர் கருத்து (185)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
08-ஜன-202111:46:52 IST Report Abuse
Jayvee ரெட்டி குடும்பத்தினர் ஒரு சிலுவை தாங்கி என்பதும் அவர்களின் திட்டமே இதுதான் என்பதும் ஊரறிந்த உண்மை
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
06-ஜன-202116:50:35 IST Report Abuse
Ellamman பரட்டை சீட்டை இறக்கினால் அது ஜோக்கரா மாறிபோச்சு... கட்டுக்குள் சேர்ந்துவிட்டது... அந்த சீட்டு திரும்ப இறங்க வாய்ப்பில்லை..இப்போ மத துவேஷ சீட்டை இறங்குகிறார்கள்...
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்அப்படி பார்த்தல் உங்கள் கட்டில் இருப்பது எல்லாமே ஜோக்கர் தானே. சுடலை, உதவாக்கரைநிதி, களிமொழி உள்பட. உங்களுக்கு காலம் காலமாக இருக்கும் ஒரே துருப்பு சீட்டு சிறுபான்மை நலம் என்று சொல்லி ஊரை ஏமாற்றும் துண்டு சீட்டு தானே....
Rate this:
Cancel
Nisha Rathi - madurai தி.மு.க என் முதல் எதிரிதி.மு.கவை அழிப்பது எங்கள் நோக்கம் ,இந்தியா
06-ஜன-202116:26:11 IST Report Abuse
Nisha Rathi சந்திரபாபு நாயுடு இந்து விரோதிகள் கூட கூட்டணி அமைத்தவர்தானே
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
10-ஜன-202102:34:34 IST Report Abuse
Amal Anandanநீங்களும் ஜெகனுக்கு ஆதரவு வழஙகியர்வர்கள் தானே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X