பொது செய்தி

இந்தியா

ஜன.,13 முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம்

Updated : ஜன 05, 2021 | Added : ஜன 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்ட(ஜன.3) நாளில் இருந்து 10 நாட்களில் விநியோகிக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது: நாட்டில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் 43.96 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர். மற்றவர்கள் வீட்டு தனிமையில்
கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, தடுப்பூசி, மத்திய அரசு, கோவிஷீல்டு, கோவாக்சின், ராஜேஷ்பூஷண், சுகாதார செயலாளர், மத்திய அரசு

புதுடில்லி: கொரோனா தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்ட(ஜன.3) நாளில் இருந்து 10 நாட்களில் விநியோகிக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது: நாட்டில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் 43.96 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர். மற்றவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர். மாநிலங்களில் நடந்த கொரோனா ஒத்திகையின் அடிப்படையில், தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள அனுமதி அளித்த நாளில் இருந்து 10 நாட்களில் தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வர தயாராக உள்ளோம்.


latest tamil news




நாட்டில் , கர்னல், மும்பை, சென்னை மற்றும் கோல்கட்டாவில் தடுப்பூசி சேமிப்பு மையங்கள் மற்றும் 37 தடுப்பூசி மையங்கள் உள்ளன. இங்கு மொத்தமாக தடுப்பூசியை சேமித்து வைக்கவும், விநியோகிக்கவும் முடியும். தடுப்பூசி மற்றும் வெப்பநிலையை டிஜிட்டல் முறையை கண்காணிக்கவும் முடியும். இந்த வசதி பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களின் விவரங்கள் ஏற்கனவே கோவின் மூலம் சேமிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 3ம் தேதி, சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிகளை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள, இந்திய மருந்து தர கட்டுப்பாட்டாளர் அமைப்பு ஒப்புதல் தெரிவித்திருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
varunkumar - tirupur,இந்தியா
05-ஜன-202118:48:20 IST Report Abuse
varunkumar வாழ்த்துக்கள் , துரித நடவடிக்கை மூலம் சீக்கிரம் முழு இயல்பு நிலைக்கு வந்தால் நல்லதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X