கோல்கட்டா: மேற்குவங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, யார் வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் சில நாட்களுக்கு முன்பு ஆளும் திரிணமுல் காங்., கட்சியில் இருந்து சுவேந்து அதிகாரி உள்ளிட்ட சில எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் இணைந்தனர். இந்நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லாவும் தனது அமைச்சர் பதவியை இன்று (ஜன.,05) ராஜினாமா செய்தார். இது குறித்து திரிணமுல் காங்., தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:

யார் வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம். லக்ஷ்மி ரத்தன் சுக்லா, தனது ராஜினாமா கடிதத்தில், விளையாட்டுக்கு அதிக நேரம் ஒதுக்க விரும்புவதால் பதவியை ராஜினாமா செய்வதாகவும், எம்.எல்.ஏ.வாக தொடர்ந்து செயல்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சுக்லாவின் பதவி விலகலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை, ஆனாலும், அவர் தொடர்ந்து கட்சியில் நீடிப்பார் என அக்கட்சியினர் கூறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE