லண்டன்: பிரிட்டனில், அதிக வீரியமுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பிரதமர் போரிஸ் ஜான்சன், தன் இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இந்தியாவின், 71வது குடியரசு தினம், வரும், 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ள இருந்தார்.
![]()
|
இந்நிலையில், பிரிட்டனில், அதிக வீரியமுள்ள, உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால், மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை காரணமாக, இந்தியா வரும் திட்டத்தை, போரிஸ் ஜான்சன் ரத்து செய்துள்ளார்.
இது குறித்து, பிரதமரின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
போரிஸ் ஜான்சன், இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பிரிட்டனில் மீண்டும் உருமாற்ற கொரானா பரவி வருவதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை கூறி, குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள இயலாத நிலையை தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE