'அது தான் பதவி கிடைச்சுருச்சே!'
த.மா.கா., சட்டசபை தேர்தல் ஆலோசனைக் கூட்டம், ஈரோடில் சமீபத்தில் நடந்தது.அதன் பின், நிருபர்களுக்கு பேட்டி அளித்த, அக்கட்சித் தலைவர் வாசன் கூறுகையில், 'சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணியைத் துவங்கி உள்ளோம். கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது தான், எங்கள் இலக்கு. அ.தி.மு.க., அரசு, மக்கள் மனநிலையை தொடர்ந்து பிரதிபலிக்கும் அரசாக
செயல்படுகிறது' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அ.தி.மு.க., தயவால், ராஜ்யசபா எம்.பி., ஆகிட்டாரு... அந்த விசுவாசத்துல பேசுறாரு...' என்றார். அருகிலிருந்த இளம் நிருபர், 'அப்படியே, அவரை நம்பி வந்தவங்களுக்கும் ஏதாவது பதவி வாங்கிக் கொடுத்தா பரவாயில்லை...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE